Wednesday, May 11, 2011

மந்திரப்பூக்கள்

பூக்களில்
எனக்குப் பிடித்தது
உன் புன்னகை பூக்கள் தாம்!!
பூக்களும்
போர்செய்யும் என்பதை
உணர்த்தியது
உன் புன்னகை!!
மருவ வைத்து
மணிக்கட்டை அறுப்பது தான்
பூக்களின் குணமோ?

எப்படியோ
எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்த
ஆசான்கள் வரிசையில்
உனது பூக்களும் இடம்பிடித்துவிட்டது
எனது  பிறந்த நாளும்
உனது பூக்களை நான்  பிரிந்த நாளும்
ஒன்றாகிவிட்டது
கொண்டாடுவதா? துக்கம் அனுசரிப்பதா?

எவ்வாறாகினும்
உனது பூக்களில்  சொட்டிய  காதல்த்தேன்
என்  உணர்வுகள் அத்தனையும்
சிதைத்து புதைத்துவிட்டது!!
இனி  ஒரு  போதும்
 உன் மாயப்பூக்களை வைத்து போர்செய்ய முடியாது
உனது மந்திர வாசத்தை நீ இழந்துவிட்டாய் 
போய்விடு!!