Wednesday, February 23, 2011

நானும் முகமூடி மனிதன்தான் !!

விளையாட்டாக

நான் மாட்டிய முகமூடி

வினை செய்துவிட்டது;

ஆம்

என் முகத்தோடு ஒட்டிக்கொண்டுவிட்டது;

எனது முகமே

முகமூடியாகி போய்விட்டது;

நானும்

முகமூடி மனிதனாகிவிட்டேன்!!!

கண்ணாடி பிம்பம்களில் கூட

எனது நிஜ முகத்தைப்  பார்த்து

வருடங்கள் ஆகிறது ;

பொய்மையையும் போலிகளையும் கண்டு

நான் இனிமேல் ஓடி ஒளியத்  தேவையில்லை

ஏனென்றால்

நான் அதன் மொத்த உருவம் போல

சித்தரிக்கபட்டுவிட்டேன்;

இது விதியின் விளையாட்டு

என்றே சொல்வேன்

ஒவ்வொரு வினைக்கும் ஒரு தீர்வுண்டு

தீர்வை நோக்கி செல்லும் என் தேடல்

வழிநெடுகிலும்

நிறைய வலிகள் வேதனைகள் அவமானங்கள்

வாரிக்கொடுத்தது

எப்படி இருந்தாலும் எனது தேடலின் வேகம்

சீராக போய்க்கொண்டு இருக்கிறது ...........

5 comments:

  1. good mahesh... thodarnthu ezhuthu. vazhthukkal!

    ReplyDelete
  2. ungal kavithaiyin vadivam migavum sirappaaga ullathu. vazhthukkal!

    ReplyDelete
  3. ""இது விதியின் விளையாட்டு

    என்றே சொல்வேன்

    ஒவ்வொரு வினைக்கும் ஒரு தீர்வுண்டு

    தீர்வை நோக்கி செல்லும் என் தேடல்

    வழிநெடுகிலும்

    நிறைய வலிகள் வேதனைகள் அவமானங்கள்

    வாரிக்கொடுத்தது

    எப்படி இருந்தாலும் எனது தேடலின் வேகம்

    சீராக போய்க்கொண்டு இருக்கிறது ........""

    arumai!??

    ReplyDelete